புதுச்சேரியில் இ.கம்யூ, விசிக-விற்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ்…

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் – திமுக இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்களும், திமுகவுக்கு 13 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

எஞ்சிய இரண்டு தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் எஞ்சி இருக்கக்கூடிய ஒரு தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.