தமிழக சட்டப் பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அயனாவரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். அதனைத் தொடர்ந்து தன்னுடைய தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கவுள்ளார்.
இதற்காக இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் புறப்படுகிறார். அவரின் வருகையையொட்டி வழிநெடுக்கிலும் திமுக தொண்டர்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஸ்டாலின் வருகையையொட்டி அயனாவரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.







