நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன்: சீமான்

நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து சீமான் இன்று பரப்புரையில் ஈடுபட்டார்…

நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து சீமான் இன்று பரப்புரையில் ஈடுபட்டார் அப்போது அவர் பேசுகையில், “தமிழக மீனவர்கள் 845 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். அதனை கேட்க யாரும் இல்லை. தமிழகத்தில் அரசு பள்ளிகள் ஒப்புக்கு நடக்கிறது. ஆட்சியாளர்கள் மாறுவார்கள் ஆட்சி மாறும் ஆனால் நிர்வாகம் மாறாத காரணத்தால்தான் அரசு பள்ளிகள் தரமற்ற நிலையில் உள்ளது.

இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளில் செய்யாத நல்லதை எப்படி அடுத்த 5 ஆண்டுகளில் செய்வார்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வி மாநில பட்டியலில் கொண்டுவரப்படும், குடிநீர் இலவசமாக வழங்கப்படும். விருப்பமிருந்தால் எங்களுக்கு ஓட்டு போடுங்க நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன்” என அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.