“அடிக்கல் நாட்டுவதிலேயே ஆர்வம் செலுத்தும் முதலமைச்சர்”-கனிமொழி பேச்சு!

மத்திய அரசுதான் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது என்றும் தமிழக அரசின் மீது, மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள் என்றும் திமுக மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி குறிப்பிட்டிருந்தார். சென்னை மயிலாப்பூர் தொகுதி…

மத்திய அரசுதான் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது என்றும் தமிழக அரசின் மீது, மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள் என்றும் திமுக மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி குறிப்பிட்டிருந்தார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வேலுவை ஆதரித்து திமுக மகளிர் அணி செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எட்டு வழி சாலைக்கு அடிக்கல் நாட்டுவதில் ஆர்வம் காட்டும் முதலமைச்சர், தமிழகத்தின் மற்ற சாலைகளை மேம்படுத்துவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்று கூறினார். மேலும், நுழைவுத்தேர்வும் வேலையின்மையும் இளம் தலைமுறையினரின் பெரிய பிரச்சனையாக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்தும் சீர்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தான் இங்கு ஆட்சி செய்து வருகிறது, அரசின் மீது மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் பெண்கள் சிலர், தொலைபேசி தரப்படுமா? என கேட்டதற்கு, அது எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை என்றும் ஸ்கூட்டர் கொடுத்தார்களா? அதுபோலதான், 6 சிலிண்டரும் கொடுக்க போகிறார்கள் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.