முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட 11 கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிவிக்க உள்ளார்.


திமுக கூட்டணியில் உள்ள 11 கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 174 தொகுதிகளில் நேரடியாகவும், 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் திமுக போட்டியிடுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 60 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதி தமிழர் பேரவை மற்றும் மக்கள் விடுதலை கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதி என கூட்டணிக் கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக தொகுதி உடன்பாடு முடிவடைந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 25 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை: முதலமைச்சர்

Ezhilarasan

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வெற்றிக்கொடி நாட்டிய காங்கிரஸ்!

Niruban Chakkaaravarthi

70-ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!