முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

தமிழக புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற இரண்டு பெண்கள்!

தமிழக சட்டப்பேரவையின் 34 பேர் அடங்கிய புதிய அமைச்சரவையில் திமுகவின் கீதா ஜீவன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை வெளியிட்டார். அதில் தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

34 பேர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை பட்டியலில் கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் ஆகிய இரண்டு பெண் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தமாகா சார்பில் போட்டியிட்ட எஸ்டிஆர் விஜயசீலனை 50,310 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார்.

புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கீதா ஜீவனுக்கு சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை வழங்கப்பட்டுள்ளது. இந்த துறையின் கீழ் மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. கடந்த திமுக ஆட்சியின் போது இவருக்கு இதே துறையை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாராபுரம் தொகுதியில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கயல்விழி செல்வராஜ் பாஜக மாநில தலைவர் எல்.முருகனை 1,393 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
பள்ளி ஆசிரியராக 10 ஆண்டுகளாக பணியாற்றிவரும் அவர். பாரம்பரியமான திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்.

கயல்விழி செல்வராஜ்க்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது. இந்த துறையின் கீழ் ஆதி திராவிடர் நலன் மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன் ஆகியவற்றை அவர் கவனிப்பார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram