மேற்கு வங்கத்தில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நான்கு பேர் கொண்ட குழு, ஆய்வை தொடங்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதில், 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். பலரது கடைகள், அலுவலகங்கள் சூரையாடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் பாஜக ஆதரவாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது.
இதில் பாஜக அலுவலகங்கள் சூறையாடப்பட்டதாக அக்கட்சியின் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய கூடுதல் செயலாளர்கள் மட்டத்திலான நான்கு பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் . மத்திய உள்துறை அமைச்சகத்தின் நான்கு பேர் குழு இன்று கொல்கத்தா வந்தது.

பின்னர் ஹவுரா அருகே நபானாவில் நான்கு பேர் குழு விசாரணையை தொடங்கியது. இந்த குழு மேற்கு வங்கத்தில் வன்முறை நேரிட்ட பகுதிகளில் தொடர்ந்து விசாரணை நடத்துகிறது. இதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.







