முக்கியச் செய்திகள் தமிழகம்

18-45 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்ந்தால் 18-45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 18-45 வயதுள்ளவர்கள் 5.8 கோடி பேர் உள்ளனர். ஆனால் இவர்களில் சராசரியாக 92,000 பேருக்கு மட்டும்தான் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் நீட்டித்தால் மாநிலத்தில் உள்ள 18-45 வயதுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த குறைந்தபட்சம் 1,149 நாட்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

96% தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளது

இது தொடர்பாக பேசியுள்ள மாநில மக்கள் நல்வாழ்வுத் துறையின் துணை இயக்குநர் கே. வினைய்குமார் கூறுகையில், “கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கையைப் பொருத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு 3 லட்சம் பேருக்கு கூட கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் மட்டும் 2.8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் ஒருநாளைக்கு தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையும் குறையும். மத்திய சுகாதாரத் துறையின் சார்பில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளில் 96% பயன்படுத்தப்பட்டுள்ளதாக.தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 97,62,957 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” அவர் கூறுகிறார்.

கடந்த 9-ம் தேதி வரை மாநிலத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட18 % பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 18-44 வயதுள்ள 2.38 % பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாவட்டவாரியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள விவரம் அட்டவணையில்:

“கொரோனா தடுப்பூசி தடையில்லாமல் வழங்கப்பட்டால்தான் மக்களிடம் ஹைப்பர் நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தமுடியும். அப்போது அடுத்துவரும் கொரோனா அலைகளிலிருந்து அவர்களை பாதுகாக்க முடியும்” என்கிறார் வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் முதன்மை வைராலஜிஸ்ட் மருத்துவர் ஜேகப் ஜான்.

தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று மத்திய தொகுப்பிலிருந்து 85,000 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசிதான் மக்கள் பாதுகாக்கும்

தமிழ்நாட்டில் 45-வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சதவீதம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேறுபடுகிறது. சென்னையில் 45% பேருக்கும் நிலகிரி மாவட்டத்தில் 48 % பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. செய்யாறு மற்றும் திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 8 % மட்டுமே உள்ளது.

“கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படுவதை அதிகப்படுத்தினால் மட்டும்தான் அந்நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கமுடியும். இன்னும் பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவேண்டியுள்ளது”என்கிறார் வேலூர் சிஎம்சி நுண் உயிரியலாளர் ககன்தீப் கான்.

உலக சுகாதார அமைப்பின் முதன் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறுகையில், “கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அப்படி தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் உருமாறிய கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்படுவார்களா என்பதை உறுதிச் செய்யவேண்டும்” என்கிறார்.

Advertisement:
SHARE

Related posts

மாவீரன் மங்கள் பாண்டேவின் பிறந்த நாள் இன்று

Vandhana

இந்தியாவில் புதிதாக 44,230 பேருக்கு கொரோனா தொற்று

Gayathri Venkatesan

முதல் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்றது!

Ezhilarasan