முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நடிகர் விஷாலின் உதவியாளர் காவல் நிலையத்தில் ஆஜர்

கடன் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் புகார் அளித்ததை அடுத்து விஷாலின் உதவியாளர் காவல்துறையிடம் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் படங்களையும் தயாரித்து வருகிறார். படத்தயாரிப்புக்காக விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் கடன் வாங்கி உள்ளார்.

தனது வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில உறுதிமொழி பத்திரங்களை ஆவணங்களாக அளித்து கடன் தொகையை பெற்றாக கூறப்படுகிறது. பின்னர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் உறுதிமொழி பத்திரங்களைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதுதொடர்பாக மேலும் மோசடியில் ஈடுபட வாய்புள்ளதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது தி.நகர் துணை ஆணையர் ஹரிகிரணிடம் நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார்.

புகார் கொடுத்த நடிகர் விஷாலிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணன் தி.நகர் காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகி உள்ளார்.

அவரிடம் மாம்பலம் காவல்துறை உதவி ஆணையர் கலியன் நடத்தி வருகிறார். புகார் கொடுத்துள்ள ஆவணங்களை காவல்துறையினர் நடிகர் விஷாலின் உதவியாளர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement:

Related posts

தனிக்குடித்தனம் செல்வதில் தகராறு….திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை!

Saravana

60 வயதானோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

Gayathri Venkatesan

தாய், ஒன்றரை வயது குழந்தை மர்மமான முறையில் இறப்பு!

Saravana Kumar