முக்கியச் செய்திகள் இந்தியா

தமிழகத்துக்கு 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: மத்திய அரசு!

தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்குள் மகாராஷ்டிராவிலிருந்து கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை டெல்லியில் சந்தித்தார்.

அப்போது அவர் அளித்த கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறியிருந்தார். எனவே தமிழகத்துக்கு கூடுதலாக 180 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து டி.ஆர்.பாலுவிடம் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அடுத்த 5 நாட்களுக்குள் தமிழகத்துக்கு மகாராஷ்டிராவிலிருந்து கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

இது தொடர்பாக இரு மாநில அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தி உள்ளார்.

Advertisement:

Related posts

திமுக ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

Nandhakumar

”வேதனைக்கு உள்ளாக்காதீர்கள்”- ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

Jayapriya

அதிகரிக்கும் கொரோனா: ஆந்திராவில் ஊரடங்கு நீட்டிப்பு!

Karthick