முக்கியச் செய்திகள் தமிழகம்

கருப்பு பூஞ்சையால் மக்கள் பயப்படவேண்டாம்: ராதாகிருஷ்ணன்!

கருப்பு பூஞ்சை நோய் குறித்து மக்கள் பயம்கொள்ள தேவையில்லை என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஏற்கனவே பல ஆண்டுகளாக கருப்பு பூஞ்சை நோய் இருந்து வருவதாகவும், கொரோனா தொற்றால் நேரும் இறப்பை அதிகரிக்கச் செய்யக் கூடியதாக இந்த நோய் இல்லை என்றும் கூறினார்.

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், ஸ்டிராய்டு எடுத்துக்கொள்பவர்கள், பல நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்கள் போன்றோருக்கே இந்த கருப்பு பூஞ்சை நோய் பரவ வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நோய் ஏற்பட்டால் உடனடியாக பொது சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், குணப்படுத்தக் கூடிய நோய் என்பதால் இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

கருப்பு பூஞ்சை நோய் பரவல் குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு; உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

Saravana

“சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறாது” – எச். ராஜா

Gayathri Venkatesan

ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள்: தலைமை தேர்தல் அதிகாரி!

Jeba