தமிழக சட்டப்பேரவையின் 19-வது தலைவராக திமுக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
துணைத் தலைவராக கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் 16வது சட்டப்பேரவைக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் மதியம் 12 மணிவரை நடைபெற்றது. இந்நிலையில் திமுக சார்பில் அப்பாவு சட்டப்பேரவை தலைவர் பொறுப்புக்கும், கு.பிச்சாண்டி துணைத்தலைவர் பொறுப்புக்கும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்தது.

இந்நிலையில், சட்டப்பபேரவையின் முதல் கூட்டம் இன்று கூடியது. முன்னதாக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டப்பேரவை செயலாளரை சந்தித்த அப்பாவு, கு.பிச்சாண்டி ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
அவர்களை எதிர்த்து மற்றவர்கள் யாரும் சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அப்பாவு, கு.பிச்சாண்டி ஆகியோர் சட்டப்பேரவை தலைவர் மற்றும் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் தமிழக சட்டப்பேரவைக்கு 19-வது சட்டப்பேரவை தலைவராக அப்பாவு தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 1952-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவருகிறார்கள்.

தமிழக சட்டப்பேரவை தலைவர்களாக இருந்தவர்கள் யார் யார்?
- ஒன்றுப்பட்ட சென்னை மாகாணமாக இருந்தபோது 1952 முதல் 1955 வரை ஜே. சிவசண்முக பிள்ளை.
2. 1955 முதல் 1956 வரை என். கோபால மேனன்.
3. 1957 முதல் 1961 வரை யு.கிருஷ்ணா ராவ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4. 1962 முதல் 1967 வரை எஸ். செல்லபாண்டியன்.
5. 1967 முதல் 1968 வரை சி. பா. ஆதித்தனார்
6. 1969 முதல் 1971 வரை கே.கோவிந்தன்.
7. 1971 முதல் 1972 வரை மதியழகன்.
8.1973 முதல் 1977 வரை கே. கோவிந்தன் மீண்டும் சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
9. 1977 முதல் 1980 வரை முனு ஆதி.
10. 1980 முதல் 1985 வரை கே. ராஜாராம்.
11.1985 முதர் 1989 வரை பி.எச்.பாண்டியன்.
12. 1989 முதல் 1991 வரை எம். தமிழ்குடிமகன்.
13. 1991 முதல் 1996 வரை ஆர். முத்தையா.
14. 1996 முதல் 2001 வரை பி.டி.ஆர் பழனிவேல் ராஜன்.
15. 2001 முதல் 2006 வரை கா. காளிமுத்து.
16. 2006 முதல் 2011 வரை ஆர். ஆவுடையப்பன்.
17. 2011 முதல் 2012 டி.ஜெயகுமார்.
18. 2012 முதல் 2016 வரை பி. தனபால்.
இவர்களுடைய வரிசையில் தற்போது தமிழக சட்டப்பேரவையின் 19-வது தலைவராக அப்பாவு தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.







