சபாநாயகர் தேர்தல்: அப்பாவு வேட்புமனு தாக்கல்!

தமிழக சட்டப்பேரவை தலைவர் தேர்தலில் திமுக சார்பில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தின் 16வது சட்டப்பேரவைக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று நடைபெறும்…

தமிழக சட்டப்பேரவை தலைவர் தேர்தலில் திமுக சார்பில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவைக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக சார்பில் அப்பாவு சட்டப்பேரவை தலைவர் பொறுப்புக்கும், கு.பிச்சாண்டி துணைத்தலைவர் பொறுப்புக்கும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்தது. இந்நிலையில், சட்டப்பபேரவையின் முதல் கூட்டம் இன்று கூடியது. முன்னதாக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டப்பேரவை செயலாளரை சந்தித்த அப்பாவு, கு.பிச்சாண்டி ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதால் நாளை பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.