திமுக – சிபிஎம் இடையே இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே தொகுதி பங்கீடு இன்று கையெழுத்தாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனையெடுத்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன்…

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே தொகுதி பங்கீடு இன்று கையெழுத்தாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதனையெடுத்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பேச்சுவார்த்தையின் முடிவில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் திமுக ஒதுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சியுடனும் திமுக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.

நேற்றையை தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஆறு தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதி பங்கீடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.