பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அதிமுகவுடன் ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என அதிமுகவுடன் பாமக நிர்வாகிகள் இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வது குறித்து…

சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என அதிமுகவுடன் பாமக நிர்வாகிகள் இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாமகவினர் ஆலோசனை நடத்தினர்.

அதில், உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், அதிமுகவினருடன், பாமக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், பாமக தரப்பில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, ஏகே.மூர்த்தி, பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிமுக வெற்றிபெறும் தொகுதிகளை பாமக கேட்பதால், தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.