திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது: முத்தரசன் தகவல்!

திமுக உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து, திமுக பேச்சுவார்த்தை குழுவுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்…

திமுக உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து, திமுக பேச்சுவார்த்தை குழுவுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார். விசிகவுக்கு 6 தொகுதிகள் இன்று ஒதுக்கப்பட்ட நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், நாளை தொகுதி உடன்பாடு தொடர்பாக திமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவித்தார். மேலும், சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை நாளை அறிவிக்கவுள்ளதாகவும் முத்தரசன் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.