திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 30ம் ஆண்டு எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருப்பத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுப் பின்னர் வாடிவாசல் வழியாகக் கொண்டுவரப்பட்டு வீதியில் ஓடவிடப்பட்டது.
விழாவில் பங்கேற்று குறைந்த நொடியில் இலக்கை அடைந்த வாணியம்பாடி வெற்றி
தளபதியார் காளைக்கு முதல் பரிசாக மூன்று சவரன் தங்க நாணயமும், ஜோலார்பேட்டை
மின்னல் ராணி காளைக்கு இரண்டாம் பரிசாக இரண்டு சவரன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. பெஸ்ட் கண்ணா பெஸ்ட் காளைக்கு மூன்றாம் பரிசாக ஒரு சவரன் தங்க நாணயம் என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழாவைக் காண ஆம்பூர் மற்றும் சுற்றியுள்ளக் கிராமங்களில் இருந்தும், வெளி
மாவட்டங்களில் இருந்தும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும்
பொதுமக்கள் திரண்டு கண்டுகளித்தனர் .
அப்போது காளைகள் மீது கை போட முயன்ற 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை மாடு
முட்டியதில் காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்றனர். இதில் படுகாயமடைந்த
மூன்று பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருகின்றனர்.