ஆதி திராவிட மக்களுக்கு தனி நிதி நிலை அறிக்கை வேண்டும் – பூவை ஜெகன் மூர்த்தி

வேளாண்மைக்கு என தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது போல பட்டியலின ஆதி திராவிட மக்களுக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று புதிய  பாரதம் கட்சி ஜெகன்…

வேளாண்மைக்கு என தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது போல பட்டியலின ஆதி திராவிட மக்களுக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று புதிய  பாரதம் கட்சி ஜெகன் மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாட்டில் பட்டியலின பழங்குடியின சிறப்பு திட்டம் 2023-2024 ஆண்டிற்கான மாதிரி நிதிநிலை அறிக்கை குறித்து புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் பேசியதாவது : வேளாண்மைக்கு என தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது போல பட்டியலின ஆதி திராவிட மக்களுக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அரசு திராவிடம் மாடல் அரசு என்று சொல்கிறார்கள். உண்மையில் இது திராவிடர்களுக்கான அரசா அல்லது ஆதிதிராவிடர்களுக்கான அரசா?.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கு சிறப்பு திட்டங்களை  செயல்படுத்துவது போல தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். தேர்தல் நேரத்தில் பட்டியலின அருந்ததியர்கள் மக்களை பற்றி சீமான் பேசியது தவறு. மேலும் கருணாநிதிக்கு பேனா சின்னம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வேறு இடத்தில் வைக்கலாம்.

அண்மைச் செய்தி : உருவாகிறது சார்பட்டா பரம்பரை 2 – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த அதிமுக ஆட்சியில் ஆதிதிராவிடநலத்துறை 98% நிதியை செலவு செய்துள்ளது. ஆனால் இந்த திமுக ஆட்சியில் வெறும் 35% சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ளது. ஆதிதிராவிட நலத்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முதலமைச்சரை சட்டப்பேரவையில் தலைவரை சந்தித்து கோரிக்கை வைப்போம் . இவ்வாறு பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.