ஸ்ரீபெரும்புதூர் அருகே, சட்டத்திற்கு புறம்பாக தரிசு நிலத்தில் கொட்டப்பட்ட தொழிற்சாலை ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் திடிரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளது. அந்த தொழிற்சாலை கழிவுகளை, தனி நபர்கள் நிறுவனங்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக தரிசு நிலம், காட்டுப்பகுதி மற்றும் ஏரி ஓரங்களில் கழிவுகள் கொட்டப்படுகிறது. ஒரு சில சமூக விரோதிகள் அதனை தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர்.
இந்நிலையில், இன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயக்குளத்தூர் பகுதியில், தரிசு நிலத்தில் கொட்டப்பட்டு இருந்த கழிவுகள் திடிரென தீப்பற்றியது. வான் உயரம் புகைமூட்டம் எழும்பி எரிய தொடங்கியது. இச்செய்தியை அறிந்த, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசு ஏற்படுகிறது. இதனை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய் துறையினர் கண்டு கொள்வதில்லை எனவும், மேலும், சட்டவிரோதமாக தொழிற்சாலை கழிவுகளை கொண்டுபவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.