திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஐந்தாம் நாளான இன்று நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான
இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமியின் மோகினி அலங்கார புறப்பாடு சிறப்பான முறையில் நடைபெற்றது.
மோகினி அலங்கார புறப்பட்டை முன்னிட்டு திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மலர்மாலைகள், ஜடை, இலைகளால் செய்யப்பட்ட பச்சைக்கிளி ஆகியவை திருப்பதி மலைக்கு கொண்டுவரப்பட்டன.
தொடர்ந்து அவற்றை மோகினி அலங்கார திருக்கோலம் கண்டருளிய உற்சவருக்கு தேவஸ்தான அர்ச்சகர்கள் அலங்கரித்தனர். இதனை தொடர்ந்து கோயில் மாட வீதிகளில் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே மோகினி அலங்கார புறப்பாடு நடைபெற்றது.
மோகினியின் அழகில் மயங்கியவராக கிருஷ்ணர் தனி பல்லக்கில் உடன்
எழுந்தருளினார். ஏழுமலையானின் மோகினி அலங்கார புறப்பட்டை மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இரவு பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட வாகன புறப்பாடு நடைபெற உள்ளது.







