திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிப் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது 50 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகளில் முறையான வசதிகள் ஏதும் இல்லாதது கண்டுப்பிடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பள்ளிப் பேருந்துகள் குழந்தைகள் பயணிக்க தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுலவலர் சந்திரசேகரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டு வாகனங்களை ஆய்வு செய்தனர்.மொத்தமுள்ள 135 பள்ளிகளை சேர்ந்த 511 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
முதற்கட்டமாக நேற்று 280 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.இந்த ஆய்வில் 17 வகையான கட்டமைப்பு வசதிகள் இருக்கக் கூடிய வாகனங்களுக்கு மட்டுமே குழந்தைகளை ஏற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஆய்வுக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்களில் அரசின் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றபடவில்லை.பெரும்பாலான வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லை 300 மில்லி மீட்டர் உயரத்தில் அளவிலான படிகள் அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.பெயரளவிற்கு இந்த சோதனை நடத்தப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
-வேந்தன்







