முக்கியச் செய்திகள் குற்றம்

காவல் நிலையத்தில் காதல் ஜோடிக்கு கத்திக்குத்து

மாற்று சமூக இளைஞரை திருமணம் செய்த தங்கையை காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்திய சகோதரர் தடுக்க முயன்ற காதலனையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருநெல்வேலி பேட்டை கோடீஸ்வரன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 25). இவரும் திருநெல்வேலி டவுன் பழனி தெருவைச் சேர்ந்த ரம்யா (வயது 21) என்பவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று பிற்பகலில் இருவரும் திருநெல்வேலி பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் காதல் ஜோடியின் பெற்றோரை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ரம்யாவின் சகோதரர் ராம்குமார் திடீரென காவல் நிலையத்திற்குள் புகுந்து தனது தங்கை ரம்யாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது காதலன் ஆனந்தராஜ், இதனை தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் தப்பியோட முயன்ற ராம்குமாரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்தில் காதல் ஜோடி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் திருநெல்வேலியில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சீனாவின் சிம்மசொப்பனம்

Vandhana

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Ezhilarasan

OBC சாதிச்சான்றிதழ்; தமிழ்நாடு அரசு அதிரடி

Saravana Kumar