தமிழ்நாட்டில் இன்று 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு

இன்று ஒரே நாளில் 1,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த கொரோனா 2ஆம் அலை ஜூன் மாதத்திற்குப் பிறகு குறைந்தது. தற்போது பதிவாகும் தினசரி கொரோனா பாதிப்பு ஒரே அளவில்…

இன்று ஒரே நாளில் 1,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த கொரோனா 2ஆம் அலை ஜூன் மாதத்திற்குப் பிறகு குறைந்தது. தற்போது பதிவாகும் தினசரி கொரோனா பாதிப்பு ஒரே அளவில் உள்ளது. எனினும் கேரளாவில் தொற்று அதிகரிப்பதால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”இன்று ஒரே நாளில் 1,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,19,511 ஆக உயர்ந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 19 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,980 ஆக அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 1,657 பேர் கொரோனாவிலிருந்து நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை பூரண குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25,68,161 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது 16,370 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்களைப் பொறுத்தவரை சென்னையில் 162, கோவையில் 239, ஈரோட்டில் 125, தஞ்சையில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100 க்கும் குறைவாகவே கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.