திருநெல்வேலி புனித அன்னம்மாள் தேவாலய 188-ம் ஆண்டு நற்கருணை பவனி!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த கிழவநேரி கிராமத்தில் உள்ள புனித அன்னம்மாள் தேவாலய 188ம் ஆண்டு நற்கருணை பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த கிழவநேரி கிராமத்தில் அமைந்துள்ளது புனித…

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த கிழவநேரி கிராமத்தில் உள்ள புனித அன்னம்மாள் தேவாலய 188ம் ஆண்டு நற்கருணை பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த கிழவநேரி கிராமத்தில் அமைந்துள்ளது புனித அன்னம்மாள் தேவாலயம். இந்த ஆலயம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததுடன் புகழ் பெற்றதாகும். இந்த தேவாலயத்தின் 188வது ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 17ம் தேதி காலையில் திருப்பலி மற்றும் மாலையில் ஜெபமாலை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

கொடியை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அர்ச்சித்து ஏற்றி வைத்தார்.அதனை தொடர்ந்து திருவிழா காலங்களில் தினமும் திருயாத்திரை திருப்பலியும், நற்கருணை வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான நற்கருணை பவனி அருட்தந்தை தேவராஜன் தலைமையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

வாணவேடிக்கைகள் வெடிக்க சிறப்புமாலை ஆராதனையுடன் திருவிழா களைகட்டியது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த திரளான கிருத்துவ பெருமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தை பிராக்ரஸ் மற்றும் சபையை சார்ந்த இறைமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.