ஈரான் மீதான தாக்குதல் உள்ளிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளை போப் 15ம் லியோ தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு அவ்வப்போது டிரம்பும் எதிர் விமர்சனம் செய்து வருகிறார்.
இதனால் நாளுக்கு நாள் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வலுத்து வருகிறது. இதற்கிடையே தன்னை இயேசு கிறிஸ்துவைப் போல் சித்தரித்து ஏஐ புகைப்படம் ஒன்றை டிரம்ப் பதிவிட்டிருந்தார். இப்புகைப்படத்திற்கு உலகளவில் பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிரூத சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கடந்த இரண்டு மாதங்களில், ஈரான் குறைந்தது 42,000 நிராயுதபாணிகளான, அப்பாவிப் போராட்டக்காரர்களைக் கொன்றிருக்கிறது என்பதையும்; ஈரான் ஒரு அணு குண்டை வைத்திருப்பது என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதையும், யாராவது தயவுசெய்து போப் லியோவிடம் சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.







