ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியுல் பெங்களூரு – லக்னோ அணிகள் மோதி வருகின்றன. சின்னசாமி ஸ்டேடியத்தில் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் சேர்த்துள்ளது.
அந்த அணியில் அதிகப்பட்சமாக தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ் 40 ரன்களும், முகுல் சௌத்ரி 39 ரன்களும், ஆயுஷ் பதோனி 38 ரன்களும் அடித்தனர்.
சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு அணியில் ராசிக் சலாம் 4 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுளையும், குருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.







