கோலாகலமாக நடைபெற்ற திருப்பதி ஏழுமலையானின் கருட வாகன சேவை!

திருப்பதி மலையில் பௌர்ணமியை முன்னிட்டு, ஏழுமலையானின் கருட வாகன சேவை கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி மலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று ஏழுமலையானின் கருட வாகன சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வியாச…

திருப்பதி மலையில் பௌர்ணமியை முன்னிட்டு, ஏழுமலையானின் கருட வாகன சேவை கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பதி மலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று ஏழுமலையானின் கருட வாகன சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வியாச பௌர்ணமி (குரு பௌர்ணமி) தினத்தை முன்னிட்டு, ஏழுமலையானின் கருட வாகன சேவை கோயில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் கருட வாகன சேவையை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி சர்வ திருவாபரண அலங்காரம் பூண்டு கோயிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார்.

அங்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு தூய தீப நைவேத்திய சமர்ப்பணம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே நான்கு மாட வீதிகளில் ஏழுமலையானின் கருட வாகன சேவை சிறப்பாக நடைபெற்றது.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.