வாக்களார் பட்டியல் சரி பார்ப்பு பணி; சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தக்காளியை பரிசளித்த அதிமுக மாவட்ட செயலாளர்!

வடசென்னையில் வாக்களார் பட்டியல் சரி பார்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிமுக முகவர்களுக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தக்காளியை பரிசாக அளித்தார். கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் வாக்காளர்…

வடசென்னையில் வாக்களார் பட்டியல் சரி பார்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிமுக முகவர்களுக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தக்காளியை பரிசாக அளித்தார்.

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியானது அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் அந்தந்த பகுதியின் முகவர்கள் சரிபார்த்து கொண்டிருந்தனர். இந்த பணியில் வாக்களர் பெயர் பட்டியலில் பெயர் விட்டு போனவர்கள், புதிதாக சேர இருப்பவர்கள், இடமாற்றம் அடைந்தவர்கள், இறந்தவர்கள், திருநங்கைகள் என அனைவருக்குமான சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

வடசென்னை, தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் பகுதியில் முருகன் கோயில் அருகாமையில், இந்த பணியில் சிறப்பாக பணியாற்றிய பாக முகவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், நாளுக்கு நாள் விலையேறி வரும் தக்காளியை பரிசளித்தார். இந்த நிகழ்வை கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்களும் தக்காளியை வாங்க வரிசையில் வந்து நிற்கவே அவர்களுக்கும் தக்காளி பரிசளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பாக முகவர்களை மட்டுமின்றி, அவ்வழியாக சென்ற மக்களையும் மகிழ்வித்துள்ளார் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.