தெலங்கானா நிர்மல் மாவட்டம் அருகே மலைப்பாதையில் புலி நடமாட்டம் – அச்சத்தில் பொதுமக்கள்!

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள மலைப்பாதையில் புலி நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தெலங்கானா மாநிலம் நிர்மல் -அடிலாபாத் ஆகிய மாவட்டங்களின் இணைப்பு சாலையில்உள்ள மலை பாதை உள்ளது. அப்பகுதியில் கடந்த சில…

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள மலைப்பாதையில் புலி நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் நிர்மல் -அடிலாபாத் ஆகிய மாவட்டங்களின் இணைப்பு சாலையில்
உள்ள மலை பாதை உள்ளது. அப்பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் காணப்படுகின்றது. அதனால், அப்பகுதி பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு அந்த மலைபாதையில் புலி ஒன்று சாலையை கடந்து சென்றது. வனப்பகுதியில் உள்ள மலைப்பாதையை கடந்து வாகனங்களில் சென்று கொண்டிருந்த
பயணிகள் அச்சமடைந்தனர்.

இதையும் படியுங்கள் : “உச்சநீதிமன்றத்தில் பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார கொள்கைக்கு ஒப்புதல் ” – மத்திய அரசு தகவல்

மேலும். அந்த புலி மெதுவாக நடந்து சாலையை கடந்து சென்றதை பார்த்து வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்தனர். புலி நடமாட்டத்தால் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள குந்தலா, நர்சாபூர், சரங்பூர் மண்டலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.