நாளை முதல் டிக்கெட் விலை உயர்வு – ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!

நாளை முதல் விமான டிக்கெட் விலை உயரும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் போர் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த போரால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால், ஜெட் விமான எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஜெட் விமான எரிபொருள் விலையை அதிகபட்சமாக 25 சதவீதம் என மத்திய அரசு வரம்பு நிர்ணத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உலகளவில் ஜெட் எரிபொருளின் (ATF) விலையில் ஏற்பட்ட கடுமையான உயர்வு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமானங்களுக்கான நிலையான கட்டண முறையை நீக்கிவிட்டு, தூரத்தின் அடிப்படையில் ஒரு புதிய கூடுதல் கட்டண முறையை அமல்படுத்தியுள்ளது. ATF விலையை அதிகபட்சமாக 25 சதவீதம் என மத்திய அரசு வரம்பு நிர்ணயித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் வந்துள்ளது.

இதன் காரணமாக சர்வதேச வழித்தடங்களிலும் எரிபொருள் கூடுதல் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வெளிநாட்டுப் பயணங்களுக்கான டிக்கெட் விலைகளையும் பாதிக்கும். நாளை முதல் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்வது பயணிகளுக்கு அதிக செலவு மிக்கதாக மாறும்.

உள்நாட்டு விமானங்களுக்கான புதிய டிக்கெட் விலை!

500 கி.மீ வரை – ரூ.299
501 முதல் 1,000 கி.மீ – ரூ. 399
1,001 முதல் 1,500 கி.மீ – ரூ. 549
1,501 முதல் 2,000 கி.மீ – ரூ. 749
2,000 கி.மீ.க்கு மேல் – ரூ. 899

வெளிநாட்டு பயணத்தின் எரிபொருள் கூடுதல் கட்டண உயர்வு விவரம்:

சார்க் நாடுகள் (வங்காளதேசம் தவிர) 24 டாலர்கள்

மத்திய கிழக்கு நாடுகள் 50 டாலர்கள்

சீனா & தென்கிழக்கு ஆசியா (சிங்கப்பூர் தவிர) 100 டாலர்கள்

சிங்கப்பூர் 60 டாலர்கள்

ஆப்பிரிக்கா 130 டாலர்கள்

ஐரோப்பியா 205 டாலர்கள்

வட அமேரிக்கா 280 டாலர்கள்

ஆஸ்திரேலியா 280 டாலர்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.