GOLD RATE | தங்கம் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் என்ன…?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை தினந்தோறும் உயர்வதும் சரிவதுமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 860-க்கும், ஒருசவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், கிராமுக்கு ரூ.340 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம். கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.