19-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் பெங்களூரு அணி, குஜராத் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் இன்று இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் பெங்களூரு – குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி கடந்த ஆண்டை போலவே இந்த சீசனிலும் கம்பீரமாக வெற்றி நடைபோடுகிறது. லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய குஜராத் அணி 2-வது தகுதி சுற்றில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, கடந்த 2025 சீசனில் தனது முதல் கோப்பையை வென்ற நிலையில், தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க போராடுகிறது







