எதிர்க்கட்சியாக காட்டிக்கொள்ளவே இபிஎஸ் ஆளுநரை சந்தித்துள்ளார் -தொல் திருமாவளவன்

எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்படுகிறோம் என்பதை காட்டிக்கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரைச் சந்தித்துள்ளார் என தொல் திருமாவளவன் பேசியுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதார பணிகள் துறையின் நூறாம் ஆண்டு தொடக்க விழாவில் சிதம்பரம்…

எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்படுகிறோம் என்பதை காட்டிக்கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரைச் சந்தித்துள்ளார் என தொல் திருமாவளவன் பேசியுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதார பணிகள் துறையின் நூறாம் ஆண்டு தொடக்க விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். விழாவில் நூற்றாண்டு தொடக்க விழாவை ஒட்டி சுகாதாரத் துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றியவர்கள் எனப் பலருக்குப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், தவறான முறையில் மின்விநியோகம் இருக்கக் கூடாது, அனைவருக்கும் மின் விநியோகம் வழங்க வேண்டும் என்ற முயற்சியின் காரணமாகவே ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேசினார்.

மேலும்,எதிர்க்கட்சியாக அதிமுகவே செயல்படுகிறது என்பதை காட்டிக் கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரைச் சந்தித்துள்ளார். எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவை பின்னுக்குத் தள்ளி நாங்கள் தான் எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறோம் என்ற முயற்சியில் பாஜக ஈடுபட்டு வரும் நிலையிலும் அதிமுக தலைமைக்கு எதிராக அதிமுகவிலேயே விமர்சனங்கள் எழுகின்ற நிலையில் இந்த சந்திப்பை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி இருப்பதாக நினைக்கிறேன் என்றார்.

அத்துடன், ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எதிர்பார்த்த ஒன்றுதான். ஜல்லிக்கட்டை மீட்டெடுக்கும் வகையில் மக்கள் போராட்டம் தொடரும் தமிழக அரசின் சட்ட போராட்டத்தின் மூலம் நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பாற்ற எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.