இலவச பேருந்து திட்டத்தில் மூலம் ஏராளமான பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட, “திமுக மகளிரணி இணையதளத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், பேச்சைக் குறைத்து செயலில் அதிகம் காட்டி வருகிறேன். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளில் 11 பெண் மேயர்கள் இருக்கின்றனர். அதில் துணை மேயராக 6 பெண்கள் உள்ளனர்.
நகராட்சித் தலைவர் பதவிகளில் 350 இடங்களில் பெண்கள் அமர்தீருகிரார்கள். இது பெரியார் கண்ட கனவு. மார்ச்-8 மகளிர்கள் மட்டுமின்றி மனித குலத்திற்கே முக்கியத்துவமான நாள். திராவிட ஆட்சியான நீதிக்கட்சி ஆட்சியில்தான் பெண்களுக்கு முதன்முறையாக வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தது திமுக அரசுதான். ஒடுக்கப்பட்ட பெண்கள் இலவச கல்வி வழங்கிய அரசு திமுக அரசு. இதே போல் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்த அரசுதான். இலவச பேருந்து திட்டத்தில் மூலம் ஏராளமான பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள்” என்று பெருமிதம் தெரிவித்தார்.







