ஒரு பெண் தான் என்ன உடை அணியவேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் முன்னதாக பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திராவிடம் மாடல் அரசு பெண்களுக்கு சம உரிமையும் , சமமான கல்வியையும் அளித்து வருகிறது. பாலின சமத்துவம், பாலின சமூக மாற்றத்தையும் வழங்கி வருகிறது என்று தெரிவித்தார். இது தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பதவி ஏற்ற நாள் அன்று பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் மகளிர்ககளுகாக வழங்கினார் முதலமைச்சர்” என்று பேசினார்.
அப்போது தொடர்ந்து பேசிய கனிமொழி, “ஆர்பறிக்கும் அலையை போல எழுந்திருக்கும் உங்களுக்கு அமைதியாகவும் இருக்க தெரியும். அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டிய தினம்தான் மகளிர் தினம். தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் மகளிர் நலத் துறை என்பதை மாற்றி மகளிர் உரிமை துறை என பெயர் மாற்றி உள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்றைய காலத்திலும் பெண் சிசுக்கொலை தொடர்கிறது. கொரோனா காலகட்டத்தில் 47% பெண்கள் வேலை இழந்துள்ளனர். 7 சதவீதம் ஆண்கள் வேலை இழந்துள்ளனர். ஒரு பெண் தான் என்ன உடை அணியவேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டும். அதை முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு மட்டும்தான் உள்ளது” என்று பேசினார்.







