ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு பொதுச் செயலாளரை, ஒற்றை தலைமையை உருவாக்க முடியாததே இன்று அதிமுகவின் நிலை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஓட்டேரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்துகொண்டு உறையாற்றினார். அப்போது பெசிய அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு பொதுச் செயலாளரை, ஒற்றை தலைமையை உருவாக்க முடியாததே இன்று அதிமுகவின் நிலையாக உள்ளது என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அவர், “உலகின் தலைசிறந்த கொள்கை மனிதநேயம்தான். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினர் வெற்றி பெற்ற போது உள்ளாட்சி தேர்தலில் இதெல்லாம் சகஜம் என்று சென்றிருக்கலாம். ஆனால் முதல்வர் கலைஞரின் அரசியல் வாரிசாக, கருத்தியல் வார்ப்பாக திகழ்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சமூக நீதி பாதுகாக்கப்பட்டதால்தான் பிரியா ராஜன் வணக்கத்திற்குரிய சென்னை மேயராக சென்று அமர முடிகிறது. இந்தியாவிலேயே யாருக்கும் எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத துணிச்சளோடு மிசா சட்டத்தை எதிர்கொண்டவர் கலைஞர். திரை கவர்ச்சி தலைவர்களை கடந்து திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்த பெருமை தளபதிக்குதான் சேரும். புலிக்கு பிறந்தது பூனை ஆகாது, தலைவருக்கு பிறந்த குழந்தை தலைவராக தான் மிளிரும்” என்று பேசினார்.
மேலும் பேசிய அவர், “திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன் வருத்தப்படுகிறார்கள் என்றவுடன் திமுகவினரை ராஜினாமா செய்ய சொல்வதுதான் முதலமைச்சர் மனிதநேயத்தின் பண்பு. கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்கள் பறிபோனால் அதை மீட்டுக் கொடுப்பதும் மனிதநேயம்தான். விசிகவினர் தளபதிக்கு போர் வாளாக, கேடையமாக இருப்பது உறுதி” என்று அவர் பேசினார்.







