“இந்த தேர்தல் விஜய்க்கும், ஸ்டாலின் சார்க்கும் இடையிலான போர்” – தவெக தலைவர் விஜய் பேச்சு!

மலை கிராமங்களில் கல்வி, மருத்துவம் முழுமையாக வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.

வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அரங்கிற்கு வந்த தவெக தலைவர் விஜய்க்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில் 4,900 போ் கலந்து கொண்ட நிலையில் அவர்கள் அனைவருக்கும் க்யூ.ஆா்.கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. காவல்துறை அறிவுறுத்தலின்பேரில், கூட்டம் நடைபெறும் இடத்தில் 140 அடி அகலம், 600 அடி நீளம் என்று மொத்தம் 84 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில், 36 அடி உயரத்தில் மேற்கூரையும், கேலரிகளுடன் 4,900 போ் அமரும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் நிகழ்ச்சியில் ஒரு குட்டி கதை சொன்னார். இதனை தொடர்ந்து பேசியவர்,

“எங்கள் ஓட்டு, எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான். எங்கள் வார்த்தையில் இருந்து மாறமாட்டோம். மக்களை நேசிக்கும் ஒரு நல்ல தலைமை இல்லாததால் இத்தனை ஆண்டுகளாக வேறு வலியில்லாமல் ஸ்டாலின் சார் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்களுக்கு சரியான நேரத்தில் ஒரு வெகுஜன மக்கள் இயக்கமாக வந்ததுதான் நம்முடைய தவெக.

நாம் ஒவ்வொரு வீட்டில் உயிராக உணர்வாக இருக்கிறோம். ஒவ்வொரு ஊராகச் சென்று உங்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் நமக்கு எதிராக நடைபெறும் சூழ்ச்சிகள் பற்றி உங்கள் எல்லாருக்கும் தெரியும். அதனால் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். நம்முடைய ஆட்சி அமைந்ததும் நான் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக வந்து என்னுடைய சொந்தங்களை எல்லாம் சந்திப்பேன்.

வரும் தேர்தல் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல். தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்கு தான் தேர்தல் என்றும் தமிழ்நாட்டுக்கும், என்டிஏ-க்கும்தான் தேர்தல் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இதென்ன நாடாளுமன்றத் தேர்தலா? பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறாரா? தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியும். தமிழ்நாட்டு மக்கள் மிகத் தெளிவான சூப்பர் மக்கள்.

உண்மையில் இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கிற போர். சரியான நிர்வாகம் செய்யாத திமுக அரசுக்கும் தவெகவுக்கும் இடையே நடக்கிற போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு. மற்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து திரும்புவீர்கள். ஆனால், இந்த முறை நீங்கள் தேர்தலில் பங்கேற்க போகிறீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு விஜய்தான் வேட்பாளர். எனவே உங்கள் வீட்டில் இருப்பவர்களின் வாக்கு, விசில் சின்னத்துக்குதான். அனைவருக்கும் தெரிந்ததால்தான் அவதூறு பரப்புகிறார்கள்.

என் மீது அவதூறு பரப்பினால் மக்கள் மீது பரப்புவது போன்று, எனக்கு அரசியல் தரவில்லை என்றால் மக்களுக்கு தெரியவில்லை என்று சொல்வது போன்று. என்ன அசிங்மாக பேசினால் மக்களை அசிங்கமா பேசுவது போன்று. எனக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செயலும் மக்களுக்கு எதிராக செய்வது என அவர்களுக்கு தெரியவில்லை. விஜய்யும் மக்களும் வேறுவேறு அல்ல. விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி, உடலும் உயிரும் மாதிரி. ஒன்றில் இருந்து ஒன்றை பிரிக்கவே முடியாது. சென்சிட்டிவான செண்டிமெண்ட் அது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் வாதிகள் அரசியலுக்கு வருவதற்கும் முன் எவ்வளவு சொத்து இருந்தது, இப்போது எவ்வளவு உள்ளது.

எனக்கு புதிய நண்பர் முதல்வர் கிடைத்துள்ளார். கரூர் விவகாரத்தில் என் மீது ஏன் பொய் பழி சுமத்தினீர்கள். லஞ்சம், ஊழல் உள்ளிட்டவை முதல்வரின் நண்பர்கள். மாதம், மாதம் கரெண்ட் பில் கட்டும்படி செய்வதாக சொன்னீர்களே செஞ்சீங்களா. மலை கிராமங்களில் பேருந்து வசதி, மருத்துவமனை வசதி இல்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு we safe model இல்லை We are not safe model. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு காணாமல் போய் பல நாட்கள் ஆனது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தவெக ஆட்சியில் முதல்பணியாக இருக்கும், போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும். மாவட்ட எஸ்.பி ஆட்சியர் சரிபாதியாக தமிழ்நாட்டில் நியமிக்கப்படுவார்கள். மலை கிராமங்களில் கல்வி, மருத்துவம் முழுமையாக வழங்கப்படும். திமுக கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி. நடைப்பெற போவது விசில் புரட்சி எலக்‌ஷன் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.