தமிழக வெற்றிக் கழகத்தின் பாக முகவர்கள் கூட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “தவெக எப்படி வென்றது என திமுகவினர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி தமிழக பெண்களின் வெற்றி. மக்களோடு மக்களாக இருப்பதால் தவெக எம்.எல்.ஏ.க்களின் பெயர் தெரிவதில்லை. வெறும் இன்ஸ்டாகிராமை வைத்தே திமுகவை முடித்து விட்டோம்.
தவெக ஆட்சியில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. எ.வ.வேலு என்ன தியாகியா? இடைத்தேர்தலிலும் வாக்கிற்கு பணம் கொடுக்க மாட்டோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தற்போது தவெகவில் இணைந்துள்ளனர். எடப்பாடியில் தவெக போட்டியிட்டிருந்தால் எடப்பாடி பழனிசாமியும் தோல்வி அடைந்திருப்பார். ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக நிற்கவைக்கிறார் இபிஎஸ். மதுராந்தகத்தில் வாக்கிற்கு 10,000 ரூபாய் கொடுத்தாலும் திமுக டெபாசிட் இழக்கும். கடந்த தேர்தலில் திமுகவால் கள்ள ஓட்டு போடமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.




