செய்யாறு அருகே பேருந்துகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்!

செய்யாறு பகுதியில் இருந்து வந்தவாசி சேத்துப்பட்டு செல்லும் சாலையில் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் இருந்து திருவத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 850 மாணவ…

செய்யாறு பகுதியில் இருந்து வந்தவாசி சேத்துப்பட்டு செல்லும் சாலையில் அரசு
பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் இருந்து திருவத்தூர் அரசு உயர்நிலைப்
பள்ளியில் 850 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் புரிசை, அனக்காவூர், பெரும்பாக்கம், அனபத்தூர், திரும்பூண்டி,நெல்வாய் இருங்கல், செங்காடு, செய்யாற்றை வென்றான், பாரசூர், முக்கூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்நத்வர்கள். 

ஆனால் இவர்கள் பள்ளி வருவதற்கும் பள்ளி முடிந்து வீடு செல்வதற்கும் சரிவர அரசுப்
பேருந்துகள் இல்லாததால் பேருந்துகளில் படிகளில் தொங்கிய நிலையில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

எனவே பள்ளி வேலைகளில் செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு சாலையில்
கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்யாறு திருவத்தூர் பள்ளி மாணவர்கள் பேருந்துக்காக காத்துக்
கிடக்கும் செய்யாற்றின் கரை ஓரமுள்ள பேருந்து நிழற்கூடத்தை சீரமைத்து தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.