ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்
கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆரணி,போளூர், கலசப்பாக்கம் மற்றும் ஜமுனாமரத்தூர் ஆகிய
தாலுகாவில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் தங்கள் பகுதியில் நிலவும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் மற்றும் ஆரணி போளூர் கலசப்பாக்கம் மற்றும் ஜமுனாமரத்தூர் ஆகிய வட்டாட்சியர்கள்
முன்னிலையில் எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் கிராமப் பகுதியில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகக் கட்டிடங்களிலும்
பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்லப் போக்குவரத்து வசதி மிகுந்த இடத்தில்
கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட வேண்டும்,
குறிப்பாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகக் கட்டிடங்களில் கழிவறைகள்
கட்டாயம் அமைத்து கொடுக்கப்பட வேண்டும்.
கோடை காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட
வேண்டும்.
உள்ளிட்ட ஆலோசனைகளை வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எடுத்துக் கூறினார்.
-ரெ.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்