தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பொதுச்செயளாலர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இன்று அவர் சட்டமன்ற கூட்டத்தில் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
இதனையடுத்து வெளியே வந்த பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ எம்.எல்.ஏவாக நான் இன்று பதவியேற்றேன். இந்த வெற்றியை எனது கணவர் ‘கேப்டன்’ விஜயகாந்த், தேமுதிக மற்றும் எங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு அர்ப்பணிக்கிறேன். சட்டமன்றத்தில் விஜய், அனைத்து அமைச்சர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நான் சந்தித்தேன். புதிய அரசுக்கு நாம் 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். விருத்தாச்சலம் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நான் குரல் கொடுப்பேன். நான் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அவர் தன்னை நிரூபித்துக் காட்டட்டும்… நாம் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம்” என்றார்.




