தமிழகம் செய்திகள்

சேத்துப்பட்டு பேரூராட்சி அலுவலகம் முன்பு டிஜிட்டல் பேனர் வைத்து வரி வசூல் -அலுவலர்களின் நுாதன செயல்

மின் கட்டணம், ஜி.எஸ்.டி, வருமான வரி கட்டத்தெரிந்த உங்களுக்கு பேரூராட்சி வரி பாக்கினை செலுத்தாது ஏன்? என நுாதன முறையில் சேத்துப்பட்டு பேரூராட்சி ஆலுவலகம் முன்பு செயல் அலுவலர் டிஜிட்டல் பேனர் வைத்து வரி வசூல் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் தலைமையில் பேரூராட்சியில் உள்ள வணிக வளாகங்களான திருமணக்கூடங்கள், கடைகள், தொழில் வரிகள் என வரிகளை வசூல் செய்து பேரூராட்சியில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்க தற்போது வரி வசூல் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மார்ச் 1 தேதி முதல் பேரூராட்சிக்கு கட்ட வேண்டிய வரி பாக்கினை செலுத்தாமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்ததால் விரக்தி அடைந்த சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் வித்தியாசமான முறையில் வரி வசூல் செய்ய முயற்சி செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பேரூராட்சியில் பொதுமக்கள் கண்ணில் படும்வகையில் டிஜிட்டல் பேனர்களில் மின்கட்டணம், ஜி.எஸ்.டி, வருமான வரி மற்றும் வங்கி கடன் போன்றவற்றை கட்டத் தெரிந்த உங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை நீங்கள் குடியிருக்கும் குடியிருப்புகளுக்கும், செய்யும் தொழலுக்கும் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கினை தாமதப்படுத்துவது ஏன்? எனவும் பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கினை விரைந்து செலுத்தினால்தான் பேரூராட்சியில் மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர முடியும் என்று நுாதன முறையில் பேனர் மூலம் பொதுமக்களிக்கிடையே வரி வசூல் செய்யும் முனைப்பில் சேத்துப்பட்டு பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை அப்பகுதி மக்கள் 50 லட்சம் வரி பாக்கி தர உள்ளது. ஆதலால் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தினால் தான் தடை இன்றி கழிவு நீர் கால்வாய், மின்கட்டண மின் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தரப்படும் என நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் தெரிவித்தார்.

அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெட்ரோல், டீசல் விலை: அரசுக்கு 72 மணி நேரம் கெடு விதித்த அண்ணாமலை

EZHILARASAN D

மு.க.ஸ்டாலின் ஸ்டைலில் கர்நாடகாவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்..!

Web Editor

கொரோனா தொற்றை வைத்து தமிழக அரசு கொள்ளை அடித்தது! – மு.க.ஸ்டாலின்

Nandhakumar