ஐாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டம், ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள் கலைத்தல், காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை ரயில் நிலையம் முதல் ஆற்று பாலம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் இடைக்கால ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை கலைக்கவும், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு கால ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துண ஊழியர்கள் உள்ளிட்டவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும் எனவும், ஏழாவது ஊதிய குழுவில் 21 மாதம் நிலுவை தொகையை வழங்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து ஆற்று பாலம் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அனகா காளமேகன்