மு.க.ஸ்டாலினை தொடர்ந்து வைகோவை சந்தித்த முதலமைச்சர் விஜய்…!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து மதிமுக பொதுச்செயளாலர் வைகோவை முதலமைச்சர் விஜய் சந்தித்துள்ளார்.

தமிழ் நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். தொடர்ந்து இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தற்காலிக சபாநாயகர் கருப்பையா, அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சட்டமன்றக் கூட்டம் முடிவுற்றதை தொடர்ந்து முதலமைச்சர் விஜய், சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலின், எ.வா. வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து மதிமுக பொதுச்செயளாலர் வைகோவையும் முதலமைச்சர் விஜய் சந்தித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் வீட்டிற்கு வந்த விஜயை வாசலில் காத்திருந்து சால்வி அணிவித்து துரை வைகோ வரவேற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.