திருச்செந்தூர் முருகன் கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணம் உயர்வு; பக்தர்கள் எதிர்ப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணத்தை ரூ.1500ல் இருந்து ரூ.5000 ஆக கோயில் நிர்வாகம் உயர்த்தியுள்ளதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணத்தை ரூ.1500ல் இருந்து ரூ.5000 ஆக கோயில் நிர்வாகம் உயர்த்தியுள்ளதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் வைகாசி விசாகம், ஆவணித் திருவிழா, கந்த சஷ்டி, மாசித் திருவிழா என பல்வேறு திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறும்.

இதையும் படிக்கவும் : பணிகளுக்கு இடையேயும் மகன்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த அமைச்சர்!

கோயிலில் சண்முகார்ச்சனை மற்றும் தங்கத்தேர் ஆகிய வழிபாட்டிற்கு பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் கட்டணம் செலுத்தி வழிபாடு செய்து வருகின்றனர். அதாவது சண்முகார்ச்சனை வழிபாட்டிற்கு கட்டணம் ரூ.1500-ம், தங்கத்தேர் வழிப்பாட்டிற்கு கட்டணம் ரூ. 2500-ம் செலுத்தி சுவாமியை வழிபாடு செய்து வந்தனர்.இந்த நிலையில் திருக்கோயிலில் சண்முகார்ச்சனை வழிபாடு கட்டணமாக ரூ.1500 ல் இருந்து ரூ.5000-ம் ஆக கோயில் நிர்வாகம் சார்பில் உயர்த்திள்ளனர். இந்த கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்த கட்டண உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பக்தர்கள் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாகவும் அரசும், அறநிலையத்துறையும் உடனடியக இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.