பணிகளுக்கு இடையேயும் மகன்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த அமைச்சர்!

அமைச்சர் அலுவலகத்தில் அலுவல் கோப்பில் கையெழுத்திட்டபடியே தாயாக மகன்களுக்கு பாடம் சொல்லித் தரும் புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவிற்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு ஆளும்…

அமைச்சர் அலுவலகத்தில் அலுவல் கோப்பில் கையெழுத்திட்டபடியே தாயாக மகன்களுக்கு பாடம் சொல்லித் தரும் புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவிற்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு ஆளும் கட்சியாக உள்ளது. என்ஆர் காங்கிரசை சேர்ந்த சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் புதுச்சேரி மாநில சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. புதுச்சேரி மாநில பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் தனது மகன்களையும் அமைச்சர் சந்தரபிரியங்கா சட்டப்பேரவைக்கு அழைத்து சென்றிருந்தார்.

அவர் தனது அலுவலகத்தில் அரசு அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்ட நிலையில் தனது மகன்களுக்கு இந்தி பாடத்தை சொல்லித் தந்த வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

அரசு பணிகளுக்கு இடையே தனது மகன்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அமைச்சர் சந்திர பிரியங்காவிற்கு பொதுமக்கள் மற்றும் பலதரப்பினர் இடையே வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.