அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைய என்ன காரணம்? மவுனத்தை கலைத்த மிக்கி ஆர்தர்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூழல் நிலவியது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் இயக்குநர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும், உலகக்…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூழல் நிலவியது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் இயக்குநர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி தொடங்கி,  நவம்பர் மாதம் 19-ம் தேதி நிறைவு பெற்றது.   இந்த உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற தவறியது.  இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் மீதும் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமின் மீதும் அணியின் முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

அரையிறுதிக்கு தகுதி பெற தவறியதை தொடர்ந்து பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.  அதனுடன் பாகிஸ்தான் அணியின் புதிய இயக்குநராக முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில்,  உலகக் கோப்பையில் அகமதாபாதில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூழல் நிலவியது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் இயக்குநர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானுக்கு ஆதரவே இல்லை.  அந்த சூழலில் விளையாடுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.  பாகிஸ்தானுக்கு எதிரான சூழல் நிலவியதால் அந்தப் போட்டியில் விளையாடுவதே மிகவும் கடினமாக இருந்தது.  இருப்பினும், பாகிஸ்தான் வீரர்கள் இதையெல்லாம் காரணமாக கூறாமல் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.