திரைப்பட இயக்குநராக களமிறங்கும் அந்தோணி தாசன்!

பிரபல பாடகரும்,  இசையமைப்பாளருமான அந்தோணி தாசன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.  ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ என்ற நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான அந்தோணி தாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …

பிரபல பாடகரும்,  இசையமைப்பாளருமான அந்தோணி தாசன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். 

‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ என்ற நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான அந்தோணி தாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் பாடகர் அந்தோணி தாசன் பேசியதாவது:

“ சிறுவயதில் நான் கூட்டத்துடன் கூட்டமாக திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.  ஒரு ரசிகனாக கொண்டாடியிருக்கிறேன்.  இன்று நாட்டுப்புற கலையில் இருந்து வளர்ந்து,  மக்களோடு ஆசீர்வாதம்,  தெய்வத்தின் அருள்,  உங்களைப் போன்ற பெரியவர்களின் ஊக்கத்தால் இன்று ஒரு இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் பயணிக்கும் பாதை சரியானது என்று நான் கருதுகிறேன்.  கூத்து கலைஞரான மக்களை நேரடியாக மகிழ்வித்து இருக்கிறேன்,  ஒரு பாடகனாகவும், இசையமைப்பாளராகவும் மக்களை மகிழ்வித்திருக்கிறேன்.  இப்போது நான் எடுத்திருக்கும் இயக்குநர் அவதாரத்தையும் சிறப்பாக செய்வேன் என்று நான் வணங்கும் கடவுள் அருளால் நம்புகிறேன்,  கடவுளுக்கு நிகராக இருக்கும் ஊடகத்தாரையும், ரசிகர்களையும் நான் வேண்டிக்கிறேன்.

நான் இயக்கும் படத்தில் வாய்ப்பு வழங்குவது எனக்கு பெருமையாகவும்,  மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.  நான் இயக்கும் படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சித்திரை முதல் நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி அறிவிக்கப்படும்.”

இவ்வாறு பாடகர் அந்தோணி தாசன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.