இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்!! – நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை… ரூ.46,000-ஐ கடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி…

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை…

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக முன்னர் சரிவை சந்தித்த நிலையில், இன்று ஏற்றம் கண்டுள்ளது.

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,640 ஆகவும், கிராமுக்கு ரூ.5,705 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது. இந்நிலையில் இன்று தங்கம் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ரூ.46,160-க்கும், ஒரு கிராம் 65 ரூபாய் உயர்ந்து ரூ.5,770-க்கும் விற்பனையாகிறது. இந்த மாதம் முழுவதுமே ஏற்ற இறக்குத்துடன் தங்கம் விலை காணப்படுகிறது. சவரன் தங்கம் ரூ.46,000-ஐ கடந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : பொட்டல்புதூர் தர்காவில் மத நல்லிணக்கம்..! – கந்தூரி விழாவில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்பு

அதேபோல் வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.₹77,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.