ஐந்து, ஆறு மாதத்தில் வரவிருக்கிறது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடப்பதற்கு
வாய்ப்பில்லை அது இந்தியாவிற்கு ஒத்து வராது என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தாம்பரம் முத்துரங்கம் பூங்காவில் ரூபாய் 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட
உடற்பயிற்சி கூடம், யோகா மையம் ஆகியவற்றை நேற்று மாலை டி.ஆர்.பாலு எம்.பி
பயன்பாட்டிற்கு வைத்தார். அதனை தொடர்ந்து 49, 52வது வார்டுகளில் ரூபாய் 19 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் பின்னர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் 1000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு எம்.பி தெரிவித்ததாவது..
” காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளார். கலைஞர் மகளிர் உதவி திட்டம் ஒரு குடும்பத்தில் இருக்கின்ற மூத்த மகளிருக்கு வழங்கப்பட உள்ளது. ஏறத்தாழ ஒன்றே கால் கோடி மக்களுக்கு இந்த திட்டம் நிறைவேற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது, 2700 கோடி ரூபாய் செலவில்
மண்டபம் கட்டப்பட்டு அதற்கு பாரத் மண்டபம் என்று பெயர் வைத்தார்கள். இந்தியா என்ற பெயரில் கூட்டணியை நாங்கள் வைத்துள்ளதால் அவர்கள் பாரத் என்ற
பெயரை வைத்தார்கள். பாரத் என பெயர் வைத்தார்களே ஆனால் அந்த பாரத் மண்டபம் தண்ணீர் நிரம்பி வழிந்தது அங்கு உட்காருவதற்கு கூட இடமில்லை அந்த அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது.
அந்த கட்டிடம் கட்டுவதற்கு திட்டம் போட்டது ஒன்று. ஆனால் திட்டமிட்டபடி
கட்டவில்லை ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டிய இடத்தில் மூன்று ரூபாய் செலவு
செய்து உள்ளார்கள். 2700 கோடி ரூபாய் செலவு செய்தது எல்லாம் வீணானது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்து வராது.
ஒரே நாடு ஒரே தேர்தல் விஷயத்தில் அவர்களே தெளிவாக இல்லை எனவே அது நடைமுறைக்கு ஒத்து வராது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஐந்து, ஆறு மாதத்தில் வரவிருக்கிறது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பில்லை அது இந்தியாவிற்கு ஒத்து வராது.
இந்தியா கூட்டணிக்கு பெயர் மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. 28 கட்சித் தலைவர்கள் சேர்ந்து முடிவு எடுத்தது தான் இந்தியா என்ற கூட்டணி பெயர். 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவில் தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை இணைத்துள்ளார், வரும் 13ம் தேதி அந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கூடி டெல்லியில் நடக்கின்ற கூட்டத்தில் என்னென்ன செய்யலாம் யோசனைகள் தெரிவிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.
மேலும் பல்வேறு கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.” என தெரிவித்துள்ளார்.